“ஒரு கல்லூரியில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து விக்கி மூவிஸ் திவ்யநாதன் தயாரிக்கும் ‘கருவாபய’ படத்தை இயக்கியுள்ளேன் என்கிறார் இயக்குனர் ரவிகாந்த்.
இதில் நாயகன்களாக புகேஷ், நிதின் நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் கோபிகா நடிக்கிறார்.
‘‘இந்தப் படம் கல்லூரிக் கதைகளில் புதுமையாக இருக்கும். திகில் சஸ்பென்ஸ் கலந்த இந்தப் படத்தின் எந்தவொரு காட்சியையும் ரசிகர்களால் யூகிக்க முடியாது. அந்தளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் சஸ்பென்ஸ் இருக்கும். சூப்பர் ஹிட் எனுமளவுக்கு தாமஸ் ரத்னம் இசையமைத்துள்ளார். கானா உலகநாதன், கானா பழனி வரிசையில், கானா புண்ணியரின் ‘கல கலனு சிரிக்கிறாளே காந்தம் போல காந்தம் போல இழுக்கிறாளே...’ என்ற பாடலை பாடியிருக்கிறார். தவிர எழுபது வயது கடந்த பரதன் விருகம்பாக்கம் ‘வெட்டுக்கிளி வாடியம்மா பச்சக்கிளி...’ என்ற குத்துப்பாடலை எழுதியிருக்கிறார்.
இந்தப் படத்தின் கதையும், பாடல்களும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் இருக்கும்’’ என்கிறார் இயக்குனர் ரவிகாந்த்.
எஸ்