சரண்யா மோகன் : 5 பன்ச்சு





ஆலப்புழாவில் பிறந்த இவர், பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்தார். அப்பா மோகன், அம்மா தேவிகா, தங்கை சுகன்யா. தேவிகா டான்ஸர் என்பதால், மகள்களுக்கு நடனம் கற்றுக் கொடுத்தார்.

நாட்டிய நிகழ்ச்சியில் பார்த்த பாசில், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார். மீண்டும் அவரது டைரக்ஷனில் ‘காதலுக்கு மரியாதை’    மற்றும் வேறு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பாசில் காட் பாதர். அவருடைய ‘ஒரு நாள் ஒரு கனவு’ படத்தில், ‘காற்றில் வரும் கீதமே...’ பாடலில் குமரிப்பெண்ணாகத் தோன்றினார். பிறகு தனி ஹீரோயினாகவும், தங்கையாகவும், இரண்டு ஹீரோயின்களில் ஒருவராகவும் நடித்தார்.

கர்நாடக இசை கற்றுள்ளார். கேரளாவில் சுகன்யாவுடன் இணைந்து மேடைகளில் நடனமாடுகிறார். கச்சேரிகளில் பாடுகிறார். இளையராஜா முன்னிலையில் பாடிய இவர், சினிமாவில் பாட வாய்ப்பு கேட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு படகு இல்லத்தை வாடகைக்கு விடுகிறார். காதலுக்கும், இவருக்கும் ரொம்ப தூரம். கிசுகிசு பிடிக்காது. தன்னைப்பற்றி வந்தாலும், மற்ற நடிகைகளைப் பற்றி வந்தாலும், கண்ணீர் விட்டு அழுவார்.
- தேவராஜ்