ஸ்ருதி ஹாசனின் லிவிங் டு கெதர்





‘வெல்கம் பேக்’ படத்தில் ஜான் ஆப்ரஹாம் ஜோடியாகிறார் ஸ்ருதி ஹாசன். பட ஷூட்டிங் தொடங்கி, முடியும் வரை ஜான், ஸ்ருதி லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழப்போவதாக இப்போதே பாலிவுட்டில் கிசு கிசு பரவியிருக்கிறது.

‘சத்யக¤ரஹா’ படத்தில் திருமணத்துக்கு முன் அஜய் தேவ்கனுடன் நெருக்கமாக நடித்தார் கரீனா கபூர். திருமணத்துக்குப் பிறகு அதே படத்தில் அஜய்க்கு முத்தம் கொடுத்து நடிக்க மறுத்துவிட்டாராம் கரீனா.

‘ஹேப்பி எண்டிங்’ படத்தில் சைப் அலிகானுக்கு ஜோடியாகிறார் இலியானா. படத்தின் கேரக்டருக்காக உடல் எடையைக் கூட்ட முடிவு செய்திருக¢கிறார் இலியானா.


ஹிரித்திக் ரோஷனின் ‘கிரிஷ் 3’ தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதில் வில்லன் வேடத்தில் விவேக் ஓபராய் நடிக்கிறார். ஹீரோவாக நடித்து வரும் சமயத்தில் வில்லனாக நடிப்பதால் தனது மனைவி வருத்தப்படுவதாகச் சொல்கிறார் விவேக்.

‘நான் கால்ஷீட் தர தயாராக இருந்தபோது கரண் ஜோஹர் என்னை வைத்து படம் எடுக்கவில்லை. இப்போது அவர் எனது கால்ஷீட் கேட்கிறார். என்னிடமோ தேதியே இல்லை’ என்கிறார் சல்மான் கான்.

விருதுக்கான படங்களில் நடித்து புகழ் பெற்ற இர்பான் கான், தயாரிப்பாளர் ஆகிவிட்டார். அவர் தயாரித்துள்ள லஞ்ச் பாக்ஸ் இம்மாதம் ரிலீசாகிறது.

ஹீரோ, இயக்குநர்களுடன் நட்பாகப் பழகி பட வாய்ப்புகள் பெறுவதில் பிபாஷா பாசு கில்லாடி என தனது குமுறலை  வெளிப்படுத்தியிருக்கிறார் பாலிவுட்டில் காணாமல் போன மல்லிகா ஷெராவத்.
 - ஜியா