இளம் நடிகர்களுக்கு தூது அனுப்பும் நடிகை





சோனியா அகர்வால் நடிப்பில் ரிலீசான 'ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தை இயக்கியவர் ராஜ் கிருஷ்ணா. அவர் முதலில் இயக்கிய ‘பகடை’ படத்தில் ராஜ்கிரண், ஜூனியர் என்.டி.ஆர் தாரக ரத்னா நடித்தனர். இதில், ஷாம்னா என்ற பெயரில் சில நாட்கள் நடித்தார் பூர்ணா. திடீரென்று ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பிறகு ‘கொடைக்கானல்’ படத்தில் நடித்த ஷாம்னா, அடுத்து திருமுருகன் இயக்கத்தில், பரத் ஜோடியாக ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் தாமரை என்ற பெயரில் நடித்தார். பிறகு ரிலீசான படங்களில் பூர்ணா என்ற பெயரில் நடித்தார். மலையாளத்தில் ‘ஷாம்னா காசிம்’ என்ற பெயரில் நடிக்கிறார்.

‘என்றென்றும் புன்னகை’, ‘இருவர் உள்ளம்’ படங்களில் நடித்து வரும் விநய், இனி தமிழில் மட்டுமே நடிக்க விரும்பி, மற்ற மொழியில் வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து விட்டாராம். ‘சுந்தர்.சி டைரக்ஷனில் ‘அரண்மனை’ படத்தில் நடிக்கிறேன். காரைக்குடியில் ஷூட்டிங் நடக்கிறது. இதற்கிடையே கிடைத்த ஓய்வில், அம்மாவைப் பார்ப்பதற்காக பெங்களூரு சென்று வந்தேன். எனக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். சினிமாவில் பிஸியாக இருப்பதால், இன்னும் அதைப்பற்றி யோசிக்கவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து திருமணம் செய்வேன்’ என்றார் விநய்.
 
தமிழ்ப் படவுலகில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, 20 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக தகவல் கூறுகிறது. 1) ‘எப்படி மனசுக்குள் வந்தாய்’ ஹீரோ விஷ்வா, தீபா. 2) ‘நடுநிசி நாய்கள்’ ஹீரோ வீரா. 3) காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன், ரேஷ்மா. 4) ஹீரோ விஷ்ணுப்பிரியன், இந்துஜா. 5) ‘ஜெயம்’ பட வில்லனும், தெலுங்கு ஹீரோவுமான கோபிசந்த், ரேஷ்மா.
6) ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீயின் தங்கையும், நடிகையுமான மிதுனா, ரியான். 7) மலையாளம் மற்றும் தமிழ்ப் பட நட்சத்திரங்களான வித்யா, வினுமோகன். 8) குணச்சித்திர நடிகை நீபா, சிவகுமார். 9) ‘கல்கி’ ஸ்ருதி, சந்திரசூட்.



10) பாடகர் ஹரிச்சரண். 11) இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி. 12) ‘வைகாசி பொறந்தாச்சு’ காவேரி, ராகேஷ். 13) ‘சுந்தரபாண்டியன்’ இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், திவ்யா. 14) நந்தா, வித்யரூபா. 15) ருக்மணி விஜயகுமார், ரோஹன் மோகன். 16) இயக்குநர் கதிர், சாந்தினி தேவி. 17) இயக்குநர் சீமான், கயல்விழி. 18) பரத், ஜெஸ்லி. 19) வசனகர்த்தாவும், நடிகருமான அஜயன் பாலா, சுதா மேரி. 20) ‘ஈரம்’ இயக்குநர் அறிவழகன், குணச்சித்திர நடிகை ஹீரா. 21) ஒளிப்பதிவாளர் மனுஷ்நந்தன், உதவி ஒளிப்பதிவாளர் கவுரி... இப்படி அந்த பட்டியல் நீள்கிறது. இதில் 12 ஜோடிகள், காதலித்து திருமணம் செய்தவர்கள். சில ஜோடிகளுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

‘நீநல்லா வருவடா’, ‘என்றென்றும் புன்னகை’, ‘யான்’ படங்களில் நடித்து வரும் ஜீவா கூறுகையில், ‘எனது தந்தை ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் படம் ‘நீ நல்லா வருவடா’. இதில், மிகப் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளையாக நடிக்கிறேன். முழுமையான காதல் கதை. காமெடி மற்றும் சென்டிமென்டுக்கு முக்கியத்துவம் இருக்கும். ‘ராம்’, ‘கற்றது தமிழ்’, ‘சிவா மனசுல சக்தி’ படங்களுக்குப் பிறகு யுவன்சங்கர்ராஜாவுடன் இணைகிறேன். அவரது இசையில் சொந்தக்குரலில் பாடுவது குறித்து முடிவாகவில்லை. எனது ஜோடியாக நஸ்ரியா நாசிம் நடிக்கிறார். ‘ஆனந்த மழை’ கருணாகரனின் உதவி யாளர் சந்திரமோகன் இயக்குகிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது’ என்றார்.

முன்னணியில் இருக்கும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர, ரகசிய தூது அனுப்பிக் கொண்டிருக்கிறாராம் நந்திதா. இப்போது ‘நளனும் நந்தினியும்’, விஜய் சேதுபதி ஜோடியாக ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’ படங்களில் நடித்து வரும் அவர், விஷ்ணு ஜோடியாக ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்து எந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து, யார் கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறார். காரணம், விஷயம் வெளியே கசிந்தால், போட்டி ஹீரோயின்கள் அந்த வாய்ப்பை தட்டிப் பறித்து, நந்தி
தாவுக்கு ‘ஆப்பு’ வைத்து விடு
கிறார்களாம்.

உதயா நடிக்கும் ‘ஆவி குமார்’ படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. தனது சகோதரர் விஜய் இயக்கத்தில் ‘தலைவா’ படத்தில் நடித்திருந்த அவர், மீண்டும் விஜய் இயக்கத்தில் நடிப்பது குறித்து முடிவாகவில்லையாம். தவிர, புதுப்படத்தில் நடிக்க கதை கேட்டு வரும் உதயாவுக்கு படம் இயக்கவும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். அடுத்த ஆண்டில் அவர் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். அந்தப் படத்துக்கு ‘காரைக்குடி பைனான்ஸ்’ என்று பெயரிட்டுள்ளார்.

கேரளாவில் பிளஸ் ஒன் படிக்கிறார் லட்சுமி மேனன். ‘எதிர்கால வாழ்க்கைக்கு படிப்பு மிகவும் அவசியம். அதை உணர்ந்திருப்பதால், பிளஸ் ஒன் படிப்பை தொடர்கிறேன். தினமும் பள்ளிக்கு சென்று வருகிறேன். எனது படிப்பு எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் சினிமாவில் நடிக்கிறேன். சித்தார்த்துடன் ‘ஜிகர்தண்டா’, விஷாலுடன் ‘பாண்டிய நாடு’, விமலுடன் ‘மஞ்சப்பை’, கவுதம் கார்த்திக்குடன் ‘சிப்பாய்’ படங்கள் இருக்கிறது. பள்ளியில் கிடைக்கும் விடுமுறை நாட்களில் மட்டுமே படத்துக்கு கால்ஷீட் கொடுக்கிறேன். இதனால் பிரச்னை இல்லாமல் நடிக்க முடிகிறது. ‘சுந்தரபாண்டியன்’, ‘கும்கி’, ‘குட்டிப்புலி’ படங்களில் நடித்திருந்த எனக்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். அவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில், நல்ல கேரக்டர்களைத் தேர்வு செய்து நடிப்பேன்’ என்ற அவர், தாய்மொழி மலையாளத்தில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டுவது இல்லை
என்கிறார்கள்.

கதையின் நாயகனாக கருணாஸ் நடித்து, தயாரித்துள்ள ‘ரகளபுரம்’ இம்மாதம் ரிலீசாகிறது. இதையடுத்து ராம்நாத் டைரக்ஷனில் ‘தப்பாட்டம்’, லட்சுமிகாந்த் இயக்கத்தில் ‘மூணு சீட்டு’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடிக்கும் அவர், காமெடி வேடத்தில் ‘சகுந்தலாவின் காதலன்’, ‘சரவணப் பொய்கை’ போன்ற படங்களில் நடிக்கிறார். ஒரே நேரத்தில் இரட்டைக்குதிரை சவாரி ஏன் என்று கேட்டால், சிரிக்கிறார். ‘சினிமாவில் அதிக ரிஸ்க் எடுத்தால்தான் ஜெயிக்க முடியும். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பாடகர், இசையமைப்பாளர், ஹீரோ, காமெடியன் என பல அவதாரங்கள் எடுத்து விட்டேன். ஒவ்வொரு துறையிலும் அதிக கவனம் செலுத்தி உழைக்கிறேன். அதனால்தான் தொடர்ந்து என்னால் ஜெயிக்கவும், நிலைத்து நிற்கவும் முடிகிறது’ என்றார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் ‘மத யானைக் கூட்டம்’ படத்தில், புதுமுகம் கதிர் ஜோடியாக நடித்துள்ளார் ஓவியா. கதைப்படி மலையாளப் பெண் கேரக்டர் என்பதால், மலையாளியான ஓவியா அதிக ஈடுபாட்டுடன் நடித்துள்ளாராம். இப்படத்துக்கு இசையமைக்க ஜி.வி.பி சம்மதிக்கவில்லை. காரணம், சொந்தப் படத்துக்கு இசையமைக்கும்போது, சரிவர கவனம் செலுத்த முடியாது என்பதுதான். எனவே, தன் உதவியாளராக இருந்து, நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ள என்.ஆர்.ரகுநந்தனையே இசையமைக்கச் சொல்லிவிட்டார். என்றாலும், தனது காதல் மனைவி சைந்தவியுடன் இணைந்து ஒரு பாடலை மட்டும் பாடிக் கொடுத்துள்ளார்.
- தேவராஜ்