பியாவுக்கு பிறந்த ஞானோதயம்





பியா பெரிதும் நம்பிக் கொண்டிருந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரீமேக், தடாலடியாக காலை வாரி விட்டது. இதனால் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளான அவர், தமிழில் புதுப்பட வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். இதற்காக தன் மேனேஜரையும் ஜரூராக முடுக்கி விட்டுள்ளாராம். ஆரம்பம் முதலே பியாவுக்கு மாடர்ன் கேரக்டர்கள் மட்டுமே கிடைத்து வந்தன.

இதனால், அவரால் வேறுவிதமான கேரக்டர்களில் நடிப்பை வெளிப்படுத்த முடியுமா என்ற கேள்வி பல இயக்குநர்கள் மனதில் எழுந்தது. அப்போது அதுபற்றி அவ்வளவாகக் கண்டுகொள்ளாத பியாவுக்கு இப்போது ஞானோதயம் பிறந்துள்ளது. பாவாடை, தாவணி அணிந்து கிராமத்துப் பெண்ணாக நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றும் அறிக்கை விட்டிருக்கிறார்.

தெலுங்கிலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நவீன் சந்திரா ஜோடியாக அவர் நடிப்பில் ரிலீசான ஒரு படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லையாம். அந்தப் படமே ‘கூட்டம்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்படுகிறது. இது ரிலீசான பிறகாவது தன்னை கோலிவுட்டில் ஏறெடுத்துப் பார்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பியா, தன் கவர்ச்சி போஸ்களை இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்.
- தேவராஜ்