தமிழ்நாடு சினிமா கலை மன்றம் சார்பில் மா.விஜயன் விருது நிகழ்ச்சியில் ‘ஓல்டு இஸ் கோல்டு’ விருதை பெற்றுள்ளார் பாண்டியராஜன்.
‘போராளி’ படத்தில் சசிகுமார் 3 கெட்-அப்பில் நடிக்கிறார்.
‘சட்டப்படி குற்றம்’ படத்துக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி, சம்பளமே வாங்கவில்லையாம்.
‘கருங்காலி’ பட இயக்குநர் களஞ்சியம் எப்போது கூப்பிட்டாலும் தேதி ஒதுக்கி, நடிக்கப் போவேன் என்கிறார் அஞ்சலி.
சின்னச் சின்ன கலை மன்றங்கள் எல்லாம் சிறந்த நடிகை விருது தருவதாக அழைக்கிறார்களாம். அமலாபாலுக்கு அதை வாங்கிக் கொள்ள விருப்பம் இல்லையாம்.
நடிகையின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க கதை கேட்டுள்ளார் நமீதா.
‘குள்ளநரி கூட்டம்’ படத்தில் தனக்கு டூயட் இல்லை என்கிற விஷயத்தை புது மனைவியிடம் சொல்லி சிரித்தாராம் ‘வெண்ணிலா கபடி குழு’ புகழ் விஷ்ணு.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மணிரத்னத்திடம் இணை இயக்குநராக பணியாற்ற உள்ளார் வஸந்த்.
ஆர்யாவும் ‘ஜெயம்’ ரவியும் ஒருவருக்கொருவர் அடிக்கடி பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
சட்டமன்ற தேர்தலில் தனித்து ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் மன்சூரலி கான், நகைச்சுவையாக பிரச்சாரம் செய்ய உள்ளாராம்.
பிரபல சாமியார்களை சந்தித்து, குறிகேட்பதை முக்கிய கடமையாக வைத்திருக் கிறாராம் காமெடி சந்தானம்.
தனது உதவியாளர்கள் சொந்த ஊருக்குப் போகும்போது சம்பளத்தைத் தவிர கூடுதலாக பணம் கொடுத்து அனுப்புகிறார் கே.எஸ்.ரவிகுமார்.
என்