மும்பை வரவுகளில் காஜல் அகர்வால் முக்கியமானவர். வழக்கமாக மும்பை வரவுகள் ஒரு படத்துக்கு மேல் தாக்கு பிடிப்பது கஷ்டம். ஆனால், காஜல் அகர்வால் அப்படியில்லை. சிம்ரன், ஜோதிகா போல் தன்னுடைய கடுமையான உழைப்பால் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
அதுவும் எப்படி..?தமிழ், தெலுங்கு, இந்தி என்ற மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் காஜலுக்கு இது ஒன்பதாவது ஆண்டு. தெலுங்கில் ‘மகதீரா’ அவருக்கு மகுடம் சூட்டியது என்றால் தமிழில் ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’ ஆகிய படங்கள் சிம்மாசனத்தில் அமர வைக்கப் போகிறது என்று கோடம்பாக்கத்தில் சத்தியம் செய்கிறார்கள். காஜலும் தன் பங்கிற்கு எங்கு சென் றாலும் ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’யை புகழ்ந்து தள்ளி வருகிறார்.
‘மாற்றானி’ல் சூர்யாவுக்கு இரட்டை வேடங்களாம். ஒருவர், நல்லவர். மற்றவர், கெட்டவர். இருவரில் யாருடன் காஜல் டூயட் பாடுகிறார் என்பது சஸ்பென்ஸ். இதில் காஜல் பத்திரிகை நிருபராக நடிக்கிறார். வில்லனின் சட்டவிரோத நடவடிக்கைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பவர்ஃபுல் வேடமாம்.
- எஸ்.