அறிமுக இயக்குநர் பி.பாரதிமோகன், ஸ்ரீஹரி மூவிஸ் சார்பில் தயாரித்து இயக்கும் படம், ‘அருவிக்கரையோரம்’. ‘‘தலைப்புதான் மென்மை. மற்றபடி, படம் முழு நீள ஆக்ஷன் மேளா. தற்காப்பு கலைகளை கற்றவர், தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் தஞ்சம் புகுந்த பெண், அந்தக் கலைஞனை வஞ்சம் தீர்க்கிறாள். அது ஏன் என்பதை பரபரப்பாக சொல்லியுள்ளேன். காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், நகைச்சுவை என சகல அம்சங்களும் இப்படத்தில் உண்டு...’’ என்று சொல்லும் பாரதிமோகன், பிரதான வேடத்திலும் நடித்திருக்கிறார். நாயகிகளாக ஜூலு, சினி நடிக்க, வில்லனாக வருகிறார், ‘ஒத்தவீடு’ திரவிய பாண்டியன். படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் யூத் ஆடியன்ஸை குறி வைத்தே இசையமைத்திருக்கிறாராம் தஷி.
- எஸ்