சில காலம் செல்போன் பயன்படுத்தாமல் இருந்தார். இப்போது விஞ்ஞான யுகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், செல்போன் பயன்படுத்துகிறார். பேட்டி என்றால் உற்சாகமடைந்து, நேரடியாகப் பேச பெரிதும் விரும்புவார். போனில் என்றால், ரத்தினச் சுருக்கமாக மட்டுமே பேசுவார்.
சாலிகிராமத்திலுள்ள வீட்டில் மிகப் பெரியலைப்ரரி வைத்துள்ளார். அதில் உலகின் தலைசிறந்த படங்களின் டி.வி.டிகளுக்கும் தனி இடம் கொடுத்துள்ளார்.
தமிழில் 14, மலையாளத்தில் 3, தெலுங்கில் 3, இந்தியில் 2, கன்னடத்தில் 1 என, 35 வருடங்களில் 23 படங்கள் இயக்கியுள்ளார். சாலி கிராமத்தில் ‘சினிமா பட்டறை’ வைத்து, மாணவர்களுக்கு சினிமா பாடங்கள், டெக்னிக்குகள் குறித்து பாடம் நடத்துகிறார். இவரது மகன் ஷங்கி மகேந்திரா, ‘ஆட்டோ கிராஃப்’ மற்றும் விளம்பரங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவரிடம்
உதவியாளராக இருந்து இயக்குநர் ஆனவர்கள் பலர். பாலா, வெற்றிமாறன், சீமான், சீனு ராமசாமி, ‘கற்றது தமிழ்’ ராம், ‘எத்தன்’ சுரேஷ், ‘படித்துறை’ சுகா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அறிவுமதி, நா.முத்துக்குமார் மட்டும் இயக்குநர்கள் ஆகாமல், பாடலாசிரியர்கள் ஆகிவிட்டனர்.
கன்னடத்தில் 1977ல் ரிலீசான ‘கோகிலா’ மூலம் இயக்குநர் ஆனார். இதற்கு சலீல் சவுத்ரி இசையமைத்தார். பிறகு இவர் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் இளையராஜா மட்டுமே இசையமைத்தார்.
- தேவராஜ்