ஆங்கிலப் படங்களை திருடி எடுக்கப்பட்ட 100 தமிழ்ப் படங்கள்



exclusive ஆங்கிலப் படங்களை திருடி எடுக்கப்பட்ட 100 தமிழ்ப் படங்கள்


ஆங்கிலப்படங்களை தழுவி எடுக்கப்பட்ட நூறு தமிழ்ப் படங்களின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளன. இவை முழுமையானவையோ அல்லது நிறைவானவையோ அல்ல. விடுப்பட்டவை ஏராளம். என்றாலும் இப்படியொரு பட்டியலை வெளியிட காரணமிருக்கிறது. அந்தக் காரணம், நிச்சயம் சம்மந்தப்பட்ட தமிழ்ப் படத்தின் இயக்குநர் அல்லது கதாசிரியரை புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல. இதை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறோம்.

ஏனெனில் எந்தவொரு படமும், பிற மொழிப் படங்கள் அல்லது நாவல்கள் அல்லது நிகழ்வுகள் அல்லது பத்திரிகை செய்திகளின் பாதிப்பிலிருந்தே உருவாகின்றன, திரைக்கதை வடிவம் எடுக்கின்றன. உலகில் உள்ள அனைத்து மொழித் திரைப்படங்களிலும் இதுதான் நிலை. அதற்காக இந்தத் தழுவல் அல்லது காப்பியை சரி என்று நியாயப்படுத்துவதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பிரபஞ்சம் தழுவிய விதி, இப்படி இருக்கிறது என்பதைதான் சொல்ல வருகிறோம்.


மற்றபடி உதவி இயக்குநர்கள் அல்லது சினிமாவில் கதை எழுத விருப்பமுள்ளவர்கள் ஆகியோருக்கு இந்தப் பட்டியல் பயன்படலாம். சம்பந்தப்பட்ட ஆங்கிலப்படங்களையும், தமிழ்ப் படங்களையும் ஒருசேர பார்த்து சில விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். ஆங்கிலப் படங்களின் காட்சிகளை எப்படி தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றலாம் என அறிந்துக் கொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் உள்ள சில தமிழ்ப் படங்கள் குறிப்பிட்ட ஆங்கிலப்படத்தின் லைனை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை அப்படியே தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டவை. சில, காட்சிக்கு காட்சி அப்படியே சுடப்பட்டவை. இன்னும் சில, குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் தன்மையை மட்டும் எடுத்துக் கொண்டவை. ஒன்றிரண்டு படங்கள், கதை சொல்லும் முறையை, திரைக் கதையின் போக்கை, மட்டும் களவாடியவை. இதையெல்லாம் ஒரு நடைமுறை பயிற்சியாக கற்கத்தான் இந்தப் பட்டியல்.


இறுதியாக ஒன்று. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள் சில தமிழ்ப் படங்கள் நேரடியாக ஆங்கிலப் படத்திலிருந்து கதைக் கருவை எடுத்துக் கொண்டவை அல்ல. குறிப்பிட்ட ஆங்கிலப் படத்தின் பாதிப்பில் உருவான பிற இந்திய மொழி படங்களில் இருந்து ரீமேக் அல்லது காப்பி அடிக்கப்பட்டவை. என்றாலும் அவற்றையும் ஆங்கிலப் படத்தில் இருந்து உருவாக்கப்பட்டவையாகவே பட்டியலில் இணைத்திருக்கிறோம்.

1. Roman Holiday (1953)   - உயிரே உனக்காக, மே மாதம்
2. The Sound of Music (1965), Jane Eyre (1943) - சாந்தி நிலையம்
3. Sunflower (1970) - ரோஜா
4. Very Bad Things (1998)) - பஞ்ச தந்திரம்
5. Derailed (2005)  - பச்சைக்கிளி முத்துச்சரம்
6. Memento (2000)  - கஜினி
7. Mrs. Doubtfire (1993)) - அவ்வை சண்முகி
8. What About Bob? (1991) - தெனாலி
9. Tsotsi (2005) - யோகி
10. Hardcore (1979), An Innocent Man(1989)  - மகாநதி
11. Taken (2008) - விருதகிரி
12. Brewster‘s Millions (1985) - அருணாச்சலம்
13. Fear (1996) ‘Klassenfahrt‘ (German  English title, ‘School Trip‘) - காதல் கொண்டேன்
14. Planes, Trains - Automobiles (1987) - அன்பே சிவம்
15. I Am Sam (2001) - தெய்வத் திருமகள்
16. Beyond the Clouds (1995) - ஆட்டோகிராஃப்
17. Judgment Night (1993) - சரோஜா
18. Moon Over Parador (1988) - இந்திரன் சந்திரன்
19. The Corsican Brothers (1941) - அபூர்வ சகோதரர்கள் (1949), நீரும் நெருப்பும்
20. The Reincarnation of Peter Proud (1975) - எனக்குள் ஒருவன்
21. Nine to Five (1980) - மகளிர் மட்டும்
22. Misery (1990) - ஜூலி கணபதி
23. Two Much (1995)) - நாம் இருவர் நமக்கு இருவர்
24. She Devil (1989) - சதி லீலாவதி
25. Witness (1985) - சூரசம்ஹாரம்
26. Green Card (1990)  - நள தமயந்தி
27. Mici + Maude (1984) - ரெட்டை வால் குருவி
28. The Killer (1989) - ரிஷி
29. Red Corner (1997)  - தாம் தூம்
30. To Each His Own (1946)  - சிவகாமியின் செல்வன்
31. The Principal (1987) - நம்மவர்
32. Rage of Angels (1983 TV Movie) - மக்கள் என் பக்கம்
33. The Bank Job (2008) - நாணயம்
34. One Flew Over the Cuckoo‘s Nest (1975) - மனசுக்குள் மத்தாப்பூ
35. Falling Down (1993) - எவனோ ஒருவன்
36. Changing Lanes (2002) -  த நா 07 4777
37. The Parent Trap (1961) - குழந்தையும் தெய்வமும்
38. Coming to America (1988) - மைடியர் மார்த்தாண்டன்
39. No Man of Her Own (1950) - நெஞ்சில் ஒரு முள்
40. Son  Rise: A Miracle of Love (1979 TV Movie) - அஞ்சலி
41. On the Line (2001) - எனக்கு 20 உனக்கு 18
42. There‘s Something About Mary (1998) - பவளக்கொடி
43. I Hired a Contract Killer (1990) - பலே பாண்டியா
44. The Dawns Here are Quiet (1972) - பேராண்மை
45. Dog Bite Dog (2006) - மைனா
46. Kikujiro (1999) - நந்தலாலா
47. Love in the Afternoon (1957)  - எங்கேயும் காதல்
48. Butterflies Are Free (1972) - ராஜபார்வை
49. Tie Me Up! Tie Me Down! (1990) - குணா
50. Leon: The Professional (1994)- சூர்யபார்வை
51. Disclosure (1994)  - இந்திரவிழா
52. Shooter (2007) - வாடா
53. The Bachelor (1999) - பம்மல் கே.சம்பந்தம்
54. Predator (1987) - அசுரன்
55. Sense and Sensibility (1995) - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
56. Cellular (2004)  - வேகம்
57.  Yours, Mine and Ours (1968) - மழலைப் பட்டாளம்
58. Carlito‘s Way (1993) - நகரம் மறுபக்கம்
59. Father of the Bride (1991) - அபியும் நானும்
60. A Little Romance (1979)  - பன்னீர் புஷ்பங்கள்
61. Mr. Deeds Goes to Town (1936) - நல்ல தம்பி
62. Romance on the High Seas (1948)- மன்மதன் அம்பு
63. Strangers on a Train (1951)- முரண்
64. Big (1988) - நியூ
65. The Classic (2003)  - சிக்கு புக்கு
66. Bangkok Dangerous (1999) - பட்டியல்
67. Urban Legend (1998) - விசில்
68. The Godfather (1972), Once upon a time in America (1984) - நாயகன்
69. Sliding Doors (1998) - 12பி
70. Bourne Identity (Robert Ludlum‘s novel, 1980, + 1988 film) - வெற்றி விழா
71. Two Much (1995)- காதலா காதலா
72. Butch Cassidy and the Sundance Kid (1969) - திருடா திருடா
73. Barefoot in the Park (1967) - அலைபாயுதே
74.  Falling Down (1993) - இந்தியன்
75. The shop around the corner (1940)  - காதல் கோட்டை
76. Goldrush (Climax) - மைக்கேல் மதன காம ராஜன்
77.  Life of David Gale (2003) - விருமாண்டி
78. Forrest Gump (1994) - வாரணம் ஆயிரம்
79. 500 Days of Summer (2009) - விண்ணைத்தாண்டி வருவாயா
80. Blood Diamond (2006) - அயன்
81. Man on Fire (2004) - ஆணை
82. Enemy of the State (1998) - வாமனன்
83. State of Play (2009) - கோ
84. Dial M for Murder (1954) - சாவி
85. Remember walk (1999 romance novel) - மின்னலே
86. The Untouchables (1987)- காக்க காக்க
87. Bone collector (1999) - வேட்டையாடு விளையாடு
88. Amores peros (2000)  - ஆய்த எழுத்து
89. Bicycle theives (1948) - பொல்லாதவன்
90. Serendipity (2001)  - ஜே ஜே
91. Hot Bubblegum (1981), American Pie (1999) - பாய்ஸ்
92. You‘ve Got Mail (1998)  - காதலர் தினம்
93. A Walk in the Clouds (1995) - பூவேலி
94. City lights (1931) - நிலவே முகம் காட்டு
95.  Lucky Number Slevin (2006) Germany  - லாடம்
96. Mystic River (2003), Departed - அஞ்சாதே
97. The Road Home (1999) - பூ
98. The Bridges of Madison county (1995) - பொக்கிஷம்
99. Titanic (1997), Lagaan (2001)  - மதராசப்பட்டினம்
100. Memories of Murder (2003 South Korean)- யுத்தம் செய்
 (படத்தில் இருப்பவர் நடிகை திவ்யா. அவருக்கும் இந்தச் செய்திக்கும் தொடர்பில்லை)