ஆதரவற்றவர்களின் தூதுவன்





மலையாளத்தில் எட்டு படங் களை இயக்கிய மோஹன் ரூப், தன்னுடைய அடுத்த அடியை பயனியர் மூவிஸ் சங்கரராமன் தயாரிக்கும் ‘தூதுவன்’ படத் தின் மூலம் தமிழில் எடுத்து வைத்துள்ளார். இவர் மம்மூட்டி, மோகன்லால் உட்பட பல பிரபலங்களை இயக்கியவர். “அனாதையாக வாழும் ஹீரோ, தன்னைப் போல் அனாதையாக வாழும் சிறுவர்களுக்கும், ஆதரவு இல்லாதவர்களுக்கும் தோள் கொடுக்கும் தோழனாக வாழ்ந்து வருகிறார். ஒரு பிரச்னை வருகிறது. அதை சமாளித்து எப்படி இறைவனின் தூதுவன் போல் செயல்பட்டு ஆதரவற்றவர்களை காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

நாயகனாக ஆதித்யா வும், நிருபராக அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக கௌரி நடிக்கிறார். தோழன் பாடல்களுக்கு சஜித்சந்திரா இசயைமைத்திருகிறார்...’’ என்கிறார் இயக்குநர் மோஹன் ரூப்.
- எஸ்