முக்கோண காமெடி டிராமா





‘அரிது அரிது’, ‘சிந்துசமவெளி’ படங்களில் சிங்கிள் ஹீரோவாக களமிறங்கிய ஹரீஷ் கல்யாண், ‘சந்தமாமா’ படத்தில் கருணாஸுடன் கைகோர்த்துள்ளார். ‘‘என்னைப் பொறுத்தவரை சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட், டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்ற பிரித்துப் பார்ப்பதில்லை. கதை எப்படி இருக்கிறது என்றுதான் பார்ப்பேன். அந்த வகையில் இயக்குநர் ராதாகிருஷ்ணன் சொன்ன கதை, எனக்கு பிடித்திருந்தது. இதில் பாடகராக நடிக்கிறேன். நாயகியாக ஸ்வேதாபாசு நடிக்கிறார்.



சீனியரான கருணாஸுடன் நடிக்கும் அனுபவம் எனக்கு தனிப்பட்ட முறையில் உதவியாக இருக்கிறது. ஒரு சகோதரனைப் போல் என்னை அவர் பார்த்துக் கொள்கிறார். இது, முக்கோண காதல் கதையல்ல. முக்கோண காமெடி டிராமா! ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘நாராயணா நாராயணா...’ என்ற குத்துப்பாடல் இளைஞர்களை சுண்டி இழுக்கும்...’’ என்கிறார், ஹரீஷ் கல்யாண்.
- சுரேஷ்ஜி