சோயா 65தேவையான பொருட்கள்

சோயா - 200 கிராம் (மீடியம் சைஸ்), சோள மாவு - 2 கப், மைதா மாவு - 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, லெமன் - 1 டீஸ்பூன் (அ) 1/2 மூடி, மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன், மிளகாய் பொடி - 1 டீஸ்பூன், தனியா பொடி - 1 டீஸ்பூன்.

செய்முறை

முதலில் சோயாவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 2 நிமிடம் கழித்து வடிய விடவும். குளிர்ந்த நீரில் அதனை அலசி தண்ணீர் இல்லாமல் பிழந்து விடவும். அதில் மேற்கூறிய மசாலாவை சேர்த்து கலந்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.