காஜுகத்லிதேவையான பொருட்கள்

முந்திரி - 1 கப், சர்க்கரை -  1/2 கப், நெய் - 2-3 டீஸ்பூன்.

செய்முறை

முதலில் முந்திரியை நன்றாக பொடித்துக்கொள்ளவும். அகலமான அடிகனமான பாத்திரத்தில் 1/2 கப் சர்க்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும்படி செய்து அதில் அரைத்த முந்திரியை சேர்த்து திப்பி இல்லாமல் கிளறவும். தீயை சிறிதாக்கிக் கொள்ளவும். லேசா தண்ணீர் கையால் தொட்டால் ஒட்டாது. அதுவே சரியான பதம்.

இனி அடுப்பிலிருந்து இறக்கி வாணலி சூட்டில் கிளறினால் திரண்டு வரும். அதை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டவும். சிறிது நேரத்தில் மிதமான சூட்டில் நெய் கையால் நன்கு பிசைந்து சப்பாத்தி கட்டையால் மேலே ஒரு தட்டு (or) பட்டர் பேப்பர் போட்டு திரட்டி வில்லைகள் போட்டால் ஆஹா! அருமையான சுவையான ஆரோக்கியமான காஜுகத்லி ரெடி.