மோஹன்தால்



தேவையான பொருட்கள்

கடலை மாவு - 2 கப், சர்க்கரை - 1 கப், நெய் - 1 கப், பால் - 1/4 கப், முந்திரி, பாதாம், பிஸ்தா - சிறிதளவு (அலங்கரிக்க).

செய்முறை

கடலை மாவில் 1/4 கப் நெய் சேர்த்து சிறிது சிறிதாக பால் சேர்த்து அழுத்திப் பிசையவும். அதனைச் சல்லடையில் உருண்டை இல்லாத அளவிற்கு நன்கு பொடியாக சலிக்கவும். அல்லது மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டினால் நன்கு பொடியாகி விடும். இனி வாணலியில் மாவைக் கொட்டி சிறிது நெய் சேர்த்து சிறு தீயில் வைத்து கூழ் பதத்திற்கு கிளறி இறக்கி விடவும்.

சர்க்கரையில் 3/4 கப் தண்ணீர் சேர்த்து குங்குமப்பூ போட்டு 2 கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் சேர்த்து அதனை கடலை மாவு கரைசலில் போட்டு மேலும் நெய் சேர்த்து நன்கு ஒட்டாமல் திரண்டு வந்ததும் நெய் தடவிய சிறிது சதுரமான ட்ரேயில் கொஞ்சம் உயரமாகக் கொட்டவும். நன்கு ஆறியதும் வில்லைகளாகப் போடவும். ட்ரேயில் கொட்டும்போதே சீவிய பருப்புகளை (முந்திரி, பாதாம், பிஸ்தா) அலங்கரிக்கவும்.