சோமாஸ்



தேவையான பொருட்கள்

மைதா - 1 கப், உப்பு - 1 சிட்டிகை, ரவை - 2 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன்.

பூரணம் செய்ய

பொட்டுக்கடலை - 1/4 கப், தேங்காய் - 1/4 கப், சர்க்கரை - 1/2 கப், முந்திரி- தேவைக்கு.

செய்முறை

மைதா, உப்பு, ரவை மூன்றையும் சேர்த்து தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறிது நேரம் ஊற விடவும். இனி பூரணத்திற்கு முதலில் பொட்டுக்கடலையை லேசாக வாணலியில் பிரட்டி பொடித்துக்கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு முந்திரி, தேங்காய் போட்டு வறுக்கவும்.

அதில் பொடித்த பொட்டுக்கடலை பொடியை சேர்த்து பிரட்டி கடைசியில் பொடித்த சர்க்கரையை சேர்த்து கிளறி இறக்கவும். மேல் மாவை பூரிபோல் திரட்டி சோமாஸ் அச்சில் வைத்து இடையில் பூரணம் வைத்து ஓரங்களில் ்தண்ணீர் லேசாக தடவி நன்கு அழுத்தி மூடவும். மிதமான சூட்டில் எண்ணெய் காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சோமாஸ் சாப்பிடவும். அருமையான தின்பண்டம். மேலும் நமது பழமையான ஒன்றும்கூட!