ஓமப்பொடிதேவையான பொருட்கள்

கடலை மாவு - 3 கப், அரிசி மாவு - 1 கப், உப்பு - 1/2 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன், ஓமம் - 2 டீஸ்பூன், வெண்ணெய், மிளகாய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை

முதலில் வெறும் வாணலியில் ஓமத்தை வறுத்து பொடித்துக் கொள்ளவும். அதில் சிறிது தண்ணீர் விட்டு அதை வடிகட்டி ஓமத்தண்ணீரை வைத்துக்கொள்ளவும். மாவுகளை சேர்த்து மற்ற பொருட்களையும் சேர்த்து ஓமத்தண்ணீரையும் விட்டு கலந்து பிசைந்து ஓமப்பொடி அச்சில் போட்டு பிழிந்தால் ஓமப்பொடி இருந்த இடம் தெரியாமல் காலியாகி விடும்.