சந்திரகலாதேவையான பொருட்கள்

மைதா - 1 கப், நெய் - 2 டீஸ்பூன், குக்கிங் சோடா - 1 டீஸ்பூன், சர்க்கரை - 2 கப், லெமன் - 1 டீஸ்பூன்.
பூரணத்திற்குகோவா - 50 கிராம் (அ) 1 கப், ரவை - சிறிதளவு.

செய்முறை

முதலில் 2 கப் சர்க்கரையில் 2½ கப் தண்ணீர் சேர்த்து 1 கம்பி பதம் வந்ததும் இறக்கி 1 டீஸ்பூன் லெமன் சாறு பிழிந்து இறக்கி விடவும். மேல் மாவிற்கு மைதாவுடன் நெய், குக்கிங் சோடா சேர்த்து கெட்டியாக பிசைந்து 5 நிமிடம் மூடி வைக்கவும். சிறு பூரிகளாகத் திரட்டிக் கொள்ளவும். இனி கோவாவுடன் ரவையை சேர்த்து அழுத்திப் பிசைந்து கொள்ளவும்.

அதனை சீடை அளவு உருட்டிக் கொள்ளவும். பூரி நடுவில் உருண்டைகளை வைத்து சோமாஸி வடிவில் மடித்து ஓரங்களை நன்கு அழுத்தி மூடி சுருட்டி மடித்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து சர்க்கரை பாகில் 5 நிமிடம் ஊற வைத்து எடுத்து பரிமாறவும்.