தேங்காய் பர்பிதேவையான பொருட்கள்

தேங்காய் -  2 கப், சர்க்கரை - 1½ கப், பால் - 3 டீஸ்பூன், நெய், முந்திரி - சிறிதளவு.

செய்முறை

முதலில் வாணலியில் தேங்காயை சிறிது நெய் ஊற்றி வதக்கவும். அதில் சர்க்கரையும் பின்னர் பால் சேர்த்து நன்கு கிளறவும். நன்கு கொதிக்கும்போது தனியாக நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கெட்டியாக வரும்வரை கிளறவும். நன்றாக தீயை குறைத்துக்கொண்டு கிளற வேண்டும். இனி ஒரு தட்டில் நெய் தடவி நன்கு உருண்டு வந்த கலவையைக் கொட்டி லேசான சூட்டில் வில்லைகள் போடவும். இப்பொழுது தேங்காய் பர்பி சுவைக்க ரெடி.