வீடு தேடி வரும் பலகாரங்கள்



உணவு சுவையாகவும் தரமானதாகவும் இருந்தால், திரும்பத் திரும்ப அந்த உணவகத்தை நாடி செல்ல தூண்டும். அப்படி ஒரு தரமான மற்றும் சுவையான உணவுகளை கடந்த 30 வருடமாக வழங்கி வருகிறார் ஜெய்மாஹி கேட்டரிங் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெய்மாஹி ஜெயராமன்.
மத்திய தொழில் பாதுகாப்பு துறையில் வேலை பார்த்து வந்த இவருக்கு  உணவுத் துறை மேல் ஆர்வம் ஏற்பட்டது.

இதனால் வேலையை ராஜினாமா செய்தவர் 1999ம் ஆண்டு கேட்டரிங் துறையில் தன்னை இணைத்துக் கொண்டார். திருமணங்களில் கேட்டரிங், குறிப்பாக தோசை உணவினை பரிமாறுவது என்பது ஸ்பெஷல் உணவாக கருதப்பட்டது. இவை மேல்தட்டு மக்களால் மட்டுமே முடியும் என்பதை தகர்த்திய பெருமை இவருக்குண்டு. எல்லாருக்கும் இந்த சேவை போய் சேர வேண்டும் என்பதில் இவர் மிகவும் திடமாக இருந்தார்.

அதே போல் கேட்டரிங் துறையில் இருப்பவர்களையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக எல்லாருக்கும் யுனிஃபார்ம் சீருடையை அறிமுகம் செய்தார். இவரின் ஸ்ெபஷாலிட்டி பிசிபெல்லாபாத், வெஜிடபிள் பிரியாணி மற்றும் பால் பாயசம்.

மேலும், கடந்த 10 வருடமாக ஆர்டரின் பேரில் மட்டுமே ஸ்வீட் மற்றும் கார வகைகளை வழங்கி வருகிறார். இது பண்டிகைக் காலம் என்பதால் தோழியர்களுக்காக தன் கைப்பக்குவத்தில் ஸ்வீட் மற்றும் கார வகைகளை வழங்கிஉள்ளார். தோழியர்களே... இந்தாண்டு பண்டிகையினை இனிப்புடன்
கொண்டாடுங்கள்.

தொகுப்பு: ப்ரியா மோகன்