மொச்சை பருப்பு குழம்பு



என்னென்ன தேவை?

மொச்சை பருப்பு - 1 கப்,
பூண்டு - 10 பல்,
மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
குழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு, தாளிக்க எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது, காய்ந்தமிளகாய் - 3.

எப்படிச் செய்வது?


குக்கரில் கழுவிய மொச்சை பருப்பு, 3 கப் தண்ணீர், மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் பொடி சேர்க்கவும். அதனுடன் மிளகு, சீரகம், பூண்டு இவற்றை ஒன்றிரண்டாக நுணுக்கி அதில் போட்டு மிதமான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்கவும். கடாயில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து மொச்சை கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.