தேங்காய் குழம்பு



என்னென்ன தேவை?

அரைக்க...


தேங்காய் - 1 கப்,
சின்ன வெங்காயம் - 10,
தனியா, மஞ்சள் தூள் - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 3,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க...

பெரிய வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 1,
கடலை எண்ணெய் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?


அரைக்க கொடுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அப்படியே பச்சையாக அரைத்து கொள்ளவும். கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக தாளித்து, அரைத்த கலவையை ஊற்றி பொங்கி வரும்போது இறக்கவும். கொதிக்க விட வேண்டாம்.