குழம்பு மிளகாய் பொடி



கொங்கு பகுதி உணவுகளுக்கு அபரிதமான ருசியும் மணமும் சேர்ப்பது குழம்பு மற்றும் கறி மிளகாய் பொடி. இதை கொண்டுதான் அனைத்து வகையான உணவுகளும் தயார் செய்யப்படுகிறது. அதற்கான செய்முறை இதோ...

என்னென்ன தேவை?

காய்ந்தமிளகாய் - 1 கிலோ,
நாட்டு கொத்தமல்லி- 1/2 கிலோ,
துவரம்பருப்பு, கடலைபருப்பு,
அரிசி - தலா 100 கிராம்,
உளுத்தம்பருப்பு - 50 கிராம்,
வெந்தயம், கடுகு - தலா 25 கிராம்,
மிளகு, சீரகம் - தலா 50 கிராம்,
மஞ்சள் - 300 கிராம், உப்பு - 100 கிராம்,
விளக்கெண்ணெய் - 1 லிட்டர்.

எப்படிச் செய்வது?

முதலில் மிளகாயை நல்ல வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பெரிய கடாயில் விளக்கெண்ணெய் 2 கரண்டி ஊற்றி கொஞ்சம் உப்பு, கறிவேப்பிலை, 1/4 பங்கு மிளகாய் போட்டு வறுக்கவும். இப்படியே மொத்த மிளகாயையும் வறுத்து விட்டு தனியா, பருப்பு, மற்ற பொருட்களையும் நன்கு வறுத்து ஆறவிட்டு மிஷினில் அரைத்து கொள்ளவும். மீதியுள்ள விளக்கெண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு நன்றாக அழுத்தி வைக்கவும். வெளியே இருந்தாலும் ஒரு வருடத்துக்கு அப்படியே இருக்கும்.

கறி மிளகாய் பொடி

என்னென்ன தேவை?

நாட்டு கொத்தமல்லி - 1/2 கிலோ,
காய்ந்தமிளகாய் - 25, மிளகு,
சீரகம் - தலா 25 கிராம்,
பட்டை - 5 துண்டு,
கிராம்பு - 10,
கசகசா, சோம்பு - தலா 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் - 100 கிராம்,
கறிவேப்பிலை - 1 கப்,
வறுக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மேலே கொடுத்த அனைத்து பொருட்களையும் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.