சிக்கன் கிரேவி



என்னென்ன தேவை?

சிக்கன் - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
பச்சைமிளகாய் - 4,
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
கறி மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்,
குழம்பு மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன், உப்பு,
எண்ணெய் - தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

பாதி அளவு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். மீதியுள்ள வெங்காயத்தை எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து அதனுடன் தேங்காய்த்துருவல், மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி சிக்கன் சேர்த்து தண்ணீர் பிரியும் வரை வதக்கவும். பின்பு கறி பொடி, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கவும். அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறு தீயில் நன்கு வேகவிடவும். கடைசியாக அரைத்த கலவையை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.