பொன்னாங்கண்ணி பருப்பு குழம்பு



என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு - 1 கப்,
பொன்னாங்கண்ணி கீரை - 1 கப்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 10,
பச்சைமிளகாய் - 5, தனியா,
சீரகம் இரண்டும் சேர்த்து - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?


மண்சட்டியில் பாசிப்பருப்பை கழுவி மஞ்சள் தூளை சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் கீரையை சேர்த்து வேகவிடவும். கீரை வெந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை இவற்றை அப்படியே பச்சையாக குழம்பில் போட்டு தனியா, சீரகத்தை கைகளால் தேய்த்து போடவும். நன்றாக வெந்ததும் எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு சேர்த்து கடைந்து பரிமாறவும்.