தட்டைப்பயறு குழம்பு



என்னென்ன தேவை?

தட்டைப்பயறு - 1 கப்,
குழம்பு மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 10,
பச்சைமிளகாய் - 4,
தக்காளி - 1, உப்பு,
தாளிக்க கடலை எண்ணெய் - தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

தட்டைப்பயறை கழுவி குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர், குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் போட்டு ஒரு விசில் விட்டு சிம்மில் வைத்து 6 விசில் விடவும். நன்றாக வெந்து கடையும் பக்குவத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் 2 விசில் விட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாயை நன்றாக வதக்கி தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும். பின்பு கடைந்த பயறு, உப்பு போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.