நச்சுக்கொட்டை கீரை குழம்பு



என்னென்ன தேவை?

நச்சுக்கொட்டை கீரை நடு நரம்பு நீக்கி நறுக்கியது - 1 கப்,
பாசிப்பருப்பு - 1/2 கப்,
சின்ன வெங்காயம் - 10,
பச்சைமிளகாய் - 4,
குழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, கடலை எண்ணெய் - தேவைக்கு, கடுகு, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். நன்றாக மலர்ந்து வெந்து வரும்போது, நறுக்கிய கீரை, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து வேகவிடவும். வெந்ததும் நன்கு கடைந்து கொள்ளவும். கடாயில் கடலை எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி கீரை கலவையில் கொட்டி ஒரு கொதி விட்டு இறக்கவும்.