வாழைப்பூ சாம்பார்



என்னென்ன தேவை?

துவரம்பருப்பு - 1 கப்,
வாழைப்பூ - 1 கப்,
நறுக்கிய தக்காளி - 1,
புளி - நெல்லிக்காய் அளவு,
சின்ன வெங்காயம் - 8,
காய்ந்தமிளகாய் - 4,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
குழம்பு மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்,
உப்பு, தாளிக்க கடலை எண்ணெய் - தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். குக்கரில் துவரம் பருப்பு, 2 கப் தண்ணீர், மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 3 விசில் விடவும். விசில் அடங்கியதும் திறந்து தக்காளி, புளிக்கரைசல், மிளகாய் பொடி, வாழைப்பூ, உப்பு போட்டு கலந்து மீண்டும் 1 விசில் விட்டு இறக்கவும். பின்பு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, குக்கரிலிருந்து சாம்பாரை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும்.