தக்காளி குழம்பு



என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய தக்காளி - 5,
சின்ன வெங்காயம் - 10,
பச்சைமிளகாய் - 4,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
தாளிக்க சீரகம், தனியா - சிறிது.

எப்படிச் செய்வது?


கடாயில் எண்ணெயை காயவைத்து நான்கு துண்டுகளாக நறுக்கிய சின்னவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை வதக்கி, தனியா, சீரகத்தை உள்ளங்கைகளால் தேய்த்து அதில் போடவும். நன்றாக வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு குழைய வேகவிட்டு எடுத்து கடைந்து பரிமாறவும்.