வாழைப்பூ மசாலா குழம்பு



என்னென்ன தேவை?

வாழைப்பூ - 1 கப்,
சின்ன வெங்காயம் - 10,
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
கறி மிளகாய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்,
புளி - சிறிய அளவு, உப்பு - தேவைக்கு.

தாளிக்க...

எண்ணெய் - தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது,
காய்ந்தமிளகாய் - 4,
நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,
கீறிய பச்சைமிளகாய் - 1.

எப்படிச் செய்வது?


வாழைப்பூவை சுத்தம் செய்து மோரில் போட்டு வைத்து பின் வேகவிட்டு பிழிந்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை வதக்கி, கொங்கு கறி பொடி, தேங்காய்த்துருவல், புளி போட்டு நன்றாக வதக்கி ஆறியதும் அரைத்து கொள்ளவும். மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, வாழைப்பூ போட்டு பிரட்டி, உப்பு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.