மூலிகை குழம்பு



என்னென்ன தேவை?

தூதுவளை இலை - 10,
முசுமுசுக்கை இலை - 10,
வாதநாராயணன் இலை - 1,
ஓமவல்லி இலை - 1,
துளசி - சிறிதளவு,
மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
பூண்டு - 10 பல்,
சின்ன வெங்காயம் - 5, பச்சைமிளகாய் - 2,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


எல்லா இலைகளையும் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் வதக்கி அதனுடன் மஞ்சள் தூள், புளி, மிளகு, சீரகம், பூண்டு போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து வதக்கி அரைத்த கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.