முட்டை மசாலா



என்னென்ன தேவை?

வேகவைத்த முட்டை - 4,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பூண்டு - 50 கிராம்,
சிறிய தக்காளி - 1,
குழம்பு மிளகாய் பொடி - 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

மிக்சியில் வெங்காயம், பூண்டு, தக்காளியை சேர்த்து நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெந்த முட்டையை முழுதாக போட்டு 1 நிமிடம் பிரட்டி எடுத்து தனியே வைக்கவும். பின்பு அதே எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து  அரைத்த மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் முட்டையை நான்கு துண்டுகளாக வெட்டி கலந்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.