அரேபிய மட்டன் கிரேவி



என்னென்ன தேவை?

ஊறவைக்க:

மட்டன்-250 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது- 4 தேக்கரண்டி,
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி,
உப்பு, தயிர், கரம் மசாலா- 3 தேக்கரண்டி,
மிளகு- 2 தேக்கரண்டி,
முந்திரி அரைத்தது-7,
வெண்ணெய்- 4
தேக்கரண்டி, பால் ஏடு, கொத்தமல்லி சிறிது.

எப்படிச் செய்வது?

முதலில் ஊறவைத்த பொருட்களை நன்கு வேகவிடவும். பின்னர் அதில் தயிர், கரம் மசாலா, மிளகு, அரைத்த முந்திரி சேர்க்கவும். பின்னர் அதனை வெண்ணெயில் பொரித்து எடுக்கவும். இறுதியாக நன்கு அடித்த பால் ஏடு மற்றும் கொத்தமல்லியுடன் கலந்து பரிமாறவும்.