மட்டன் ஈரல் வறுவல்
என்னென்ன தேவை?
மட்டன் ஈரல்-100 கிராம், வெங்காயம்- 2, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 4, இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் - ½ தேக்கரண்டி, மல்லித்தூள்- ½ தேக்கரண்டி, மட்டன் மசாலா- 4 தேக்கரண்டி, சோம்பு- ½ தேக்கரண்டி, பட்டை- ½ தேக்கரண்டி, எண்ணெய்- 5 தேக்கரண்டி, கொத்தமல்லி, உப்பு - சிறிது.
எப்படிச் செய்வது?
முதலில், எண்ணெயில் பட்டை, சோம்பு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின் அதில் வெங்காயம், தக்காளி, சேர்க்கவும், பின்னர் ஈரல், மிளகாய், மல்லித்தூள், மட்டன் மசாலா சேர்த்து, தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இறுதியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
|