மட்டன் மண்டி பிரியாணி



என்னென்ன தேவை?

பெரிதாக வெட்டிய மட்டன் - 500 கிராம்,
கரம் மசாலா- 3 தேக்கரண்டி,
பச்சைமிளகாய் - 5,
இஞ்சி பூண்டு விழுது- 3 தேக்கரண்டி,
எண்ணெய் - 8 தேக்கரண்டி,
வெண்ணெய்- 3 தேக்கரண்டி,
வெங்காயம் - 5,
சீரக சம்பா அரிசி - 750 கிராம்,
கொத்தமல்லி, உப்பு சிறிது.

எப்படிச் செய்வது?

முதலில் மட்டன் துண்டுகளை கரம் மசாலா, பச்சைமிளகாய், பூண்டு, வெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு பின் வறுத்து கொள்ளவும்.  பின்னர், ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, சீரக சம்பா அரிசி, கொத்தமல்லி, பச்சைமிளகாய் உடன் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். வெந்தவுடன் அதில் வறுத்த மட்டன் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வேக விட்டு பின்பு பரிமாறவும்.