மட்டன் ரசம்
என்னென்ன தேவை?
மட்டன் - 250 கிராம், நசுக்கிய தக்காளி - 2, மிளகாய்த்தூள் - ½ தேக்கரண்டி, தனியாதூள் - ¼ தேக்கரண்டி, சீரகத்தூள் - ¼ தேக்கரண்டி, பச்சைமிளகாய் - 3, உப்பு சிறிது.
தாளிக்க...
மிளகு - ½ தேக்கரண்டி, காய்ந்தமிளகாய் - 3, சீரகம் - ½ தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிது.
 எப்படிச் செய்வது?
முதலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்க்கவும். பின்னர் அதனுடன் தக்காளி,மிளகாய்,தனியா, சீரகத் தூள் சேர்க்கவும். இறுதியாக மட்டன் உடன் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விடவும். பின்பு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
|