ஈசி பிஸ்கெட் கேக்



என்னென்ன தேவை?

மேரி பிஸ்கெட் - 20,
காபி - 1/4 கப், கோகோ பவுடர், சாக்லெட் பவுடர் - தலா 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 கப்,
ஐசிங் சுகர் - 3 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்,
டார்க் சாக்லெட் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?


ஒரு நான்ஸ்டிக் தவாவில் 1/2 கப் வெண்ணெய், கோகோ பவுடர், சாக்லெட் பவுடர், ஐசிங் சுகர் சேர்த்து சூடாக்கவும். கெட்டியான பேஸ்ட்  பதம் வந்ததும் வெனிலா எசென்ஸ் சேர்த்து இறக்கவும். சாக்லெட் மிக்ஸ் ரெடி.டார்க் சாக்லெட், 1/2 கப் வெண்ணெய் சேர்த்து டபுள்  பாயிலிங் முறையில் கிரீமாக செய்யவும். ஐசிங் சாக்லெட் ரெடி.ஒரு டிரேயில் மேரி பிஸ்கெட்டை காபியில் முக்கி வைத்து, அதன் மேல்  சாக்லெட் மிக்ஸ் 1 டீஸ்பூன் தடவவும். மீண்டும் அதன் மீது மற்றொரு மேரி பிஸ்கெட்டை காபியில் முக்கி அடுக்கவும். இதே போல்  10பிஸ்கெட்டும், சாக்லெட் மிக்ஸும் மாறி மாறி அடுக்கி வைக்கவும். கடைசியாக ஐசிங் சாக்லெட் கிரீமை மேலே ஊற்றி ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து பரிமாறவும்.