பைனாப்பிள் சுவிஸ் ரோல்



என்னென்ன தேவை?

பைனாப்பிள் ப்ளெயின் கேக் பொடித்தது - 1/2 கப்,
வெண்ணெய் - 3 டீஸ்பூன்,
கிரீம் சீஸ் - 1/2 கப்,
பவுடர் சுகர், பால் பவுடர் - தலா 1/4 கப், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
விருப்பமான ஜாம் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


ஒரு பவுலில் 2 டீஸ்பூன் கிரீம் சீஸ், 1 டீஸ்பூன் வெண்ணெய், 2 டீஸ்பூன் பவுடர் சுகர் சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் 1/2 டீஸ்பூன்  உதிர்த்த கேக், 1/2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவிய பட்டர் பேப்பரில் சமமாக பரப்பவும்.மற்றொரு பவுலில் மீதியுள்ள கிரீம் சீஸ், பால் பவுடர், வெனிலா எசென்ஸ், பவுடர் சுகர், வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கேக்  கலவையில் பரப்பவும். நடுவில் ஒரு கோடு போல் ஜாம் வைத்து, பட்டர் பேப்பரை நன்கு இறுக்கமாக சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்து துண்டுகள்  செய்து பரிமாறவும்.