பட்டர் ஃப்ரூட் மோஸ்



என்னென்ன தேவை?

பட்டர் ஃப்ரூட் - 1,
சீஸ் கிரீம் - 1/4 கப்,
 பவுடர் சுகர் - 3 டீஸ்பூன்,
விப்பிங் கிரீம் - 2 டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பட்டர் ஃப்ரூட்டை நன்கு மசித்து கொள்ளவும். பெரிய பவுலில் மசித்த பழம், சீஸ் கிரீம், விப்பிங் கிரீம், பவுடர் சுகர், வெனிலா எசென்ஸ்  சேர்த்து நன்றாக அடித்து சிறு சிறு கப்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து சாக்லெட் கிரீமால் அலங்கரித்து பரிமாறவும்