கோகோ பிஸ்கெட் ட்ரபிள்ஸ்



என்னென்ன தேவை?

பொடித்த கோகோ பிஸ்கெட் - 1/2 கப்,
சாக்லெட் கிரீம் - 2 டீஸ்பூன்,
கஸ்டர்டு - 1/4 கப், அலங்கரிக்க கோகோ பிஸ்கெட் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


கிண்ணத்தில் முதலில் பொடித்த பிஸ்கெட் துண்டுகளை 1 இஞ்ச் அளவிற்கு நன்கு அழுத்தி போட்டு, அதன் மேல் கஸ்டர்டு 1 இஞ்ச்  அளவில் போடவும். 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து செட் ஆனதும் ஒரு லேயர் சாக்லெட் கிரீம் ஊற்றவும். அதுவும் செட் ஆனதும் மீண்டும்  மேலே சிறிது கஸ்டர்டு ஊற்றி பிஸ்கெட்டால் அலங்கரித்து பரிமாறவும்.