சாக்லெட் சிக்கி பாப்ஸ்



என்னென்ன தேவை?

பொடித்த வேர்க்கடலை - 1 கப்,
பொடித்த வெல்லம் - 1 கப்,
நெய் - 1/4 கப்,
மில்க் சாக்லெட் - 1/4 கப்,
லாலிபாப் குச்சிகள் - தேவைக்கு,
ஒன்றிரடண்டாக உடைத்த வேர்க்கடலை - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து, வெறும் கடாயில் லேசாக வறுக்கவும். அத்துடன் வெல்லம், நெய்  கலந்து ஒரு ட்ரேயில்  பரப்பவும். டபுள் பாயிலிங் முறையில் மில்க் சாக்லெட்டை உருக்கி வேர்க்கடலை கலவையின் மேல் சமமாக ஊற்றவும். அதற்கு மேல்  ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலையை தூவி, லாலிபாப் குச்சிகளை சொருகி ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

குறிப்பு... விரும்பினால் கோகோ சாக்லெட்டையும் பயன்படுத்தலாம்.