தேங்காய் பாப்ஸ் சாக்லெட் ட்ரபிள்ஸ்



என்னென்ன தேவை?

தேங்காய்த்துருவல் - 1 கப்,
 ரவை - 1 டீஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்,
பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்,
சாக்லெட் கிரீம் - 1/4 கப்.

எப்படிச் செய்வது?


தேங்காய்த்துருவல், ரவை, கன்டென்ஸ்டு மில்க் மூன்றையும் ஒன்றாக கலந்து, கடாயில் போட்டு மிதமான தீயில் வைத்து கிளறவும்.  அனைத்தும் சேர்ந்து நன்கு சுருண்டு வரும்போது அதில் ஏலக்காய் பொடி போட்டு கிளறவும். கடாயில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும்  இறக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகள் பிடித்து ஃப்ரிட்ஜில் 20 நிமிடம் வைத்து செட் ஆனதும், சாக்லெட் கிரீமில் முக்கியெடுத்து  மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.