சாக்லெட் சாண்ட்விச்



என்னென்ன தேவை?

விருப்பமான சாக்லெட் - 1/4 கப்,
உதிர்த்த வெனிலா கேக் - 1/4 கப்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
சாக்லெட் சிரப் - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்,
விருப்பமான பிஸ்கெட் - 6.

எப்படிச் செய்வது?


சாக்லெட்டை உருக்கி அதனுடன் உதிர்த்த கேக், வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இரண்டு  பிஸ்கெட்டுகளை எடுத்து சிறிது சாக்லெட் சிரப் தடவி நடுவில் இந்த கலவையை வைத்து மெதுவாக அழுத்தி சர்க்கரையில் உருட்டி  பரிமாறவும்.