செஷ்வான் நூடுல்ஸ்



என்னென்ன தேவை?

செஷ்வான் சாஸ் செய்ய...

பூண்டு, இஞ்சி,
செலரி - தலா 1 டேபிள்ஸ்பூன்,
வேகவைத்த மிளகாய் - 5,
செஷ்வான் விதை - 25 கிராம்,
வினிகர் - சிறிது,
தக்காளி சாஸ் - சிறிது,
உப்பு - சிறிது.

அனைத்தையும் நன்றாக அரைத்து எண்ணெயில் நன்றாக வேகும் வரை வதக்கி இறக்கவும். செஷ்வான் சாஸ் ரெடி.

நூடுல்ஸ் - 2 பாக்கெட்,
வெங்காயம், குடைமிளகாய்,
கேரட் - தலா 1,
கோஸ் - 2 கப்,
வெங்காயத்தாள் - 1 கப்,
காய்ந்தமிளகாய் - 2,
பூண்டு, இஞ்சி - தலா 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய், சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு,
செஷ்வான் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

காய்கறிகள், பூண்டு, இஞ்சி அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். நூடுல்ஸை வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து காய்ந்தமிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயம், கேரட், குடைமிளகாய், கோஸ் போட்டு வதக்கவும். பாதி வதங்கியதும் செஷ்வான் சாஸ், காய்ந்தமிளகாய் விழுது, சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள், உப்பு, நூடுல்ஸ், வெங்காயத்தாளை போட்டு கிளறி சூடாக பரிமாறவும்.