ஸ்வீட்கார்ன் வெஜ் சூப்



என்னென்ன தேவை?

இனிப்பு சோள முத்துக்கள் - 1 கப்,
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
ஸ்ப்ரிங் ஆனியன் - 1 டீஸ்பூன்,
உப்பு, சோள மாவு,
வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சோளத்தை ஊறவைத்து முக்கால் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, கேரட், பீன்ஸ், அரைத்த சோளத்தை போட்டு கொதிக்க வைக்கவும். இத்துடன் சோள மாவை சிறிது நீரில் கரைத்து ஊற்றி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். ஸ்ப்ரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறவும்.