மான்சோ சூப்



என்னென்ன தேவை?

வறுத்த நூடுல்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கேரட்,
பீன்ஸ், காளான் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
குடைமிளகாய், பூண்டு, பச்சைமிளகாய், கொத்தமல்லி, ஸ்ப்ரிங் ஆனியன் - தலா 1 டீஸ்பூன்,
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
உப்பு, சோள மாவு, வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு, பச்சைமிளகாய், கேரட், பீன்ஸ், காளான், குடைமிளகாயை போட்டு சிறிது வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், சோள மாவு சேர்க்கவும். சிறிது கெட்டியாக வந்ததும் ஸ்ப்ரிங் ஆனியன், கொத்தமல்லி, வறுத்த நூடுல்ஸ் போட்டு பரிமாறவும்.