ஷாங்காய் நூடுல்ஸ்



என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 100 கிராம்,
நூடுல்ஸ் - 2 பாக்கெட்,
பூண்டு, இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம், குடைமிளகாய்,
கேரட் - தலா 1,
தக்காளி - 2,
கோஸ் - 2 கப்,
வெங்காயத்தாள் - 1 கப்,
உப்பு, எண்ணெய், சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு,
டோபாஸ்கோ சாஸ், வினிகர், ஓர்க்ஸ்ர்டைர் சாஸ் - சிறிது.

எப்படிச் செய்வது?

காய்கறிகள், பூண்டு, இஞ்சி அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பாஸ்மதி அரிசி, நூடுல்ஸையும் தனித்தனியாக வேகவைத்து, உதிர் உதிராக வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு, இஞ்சி, வெங்காயம், கேரட், குடைமிளகாய், கோஸ் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும், தக்காளி, சோயா சாஸ், டோபாஸ்கோ சாஸ், வினிகர், ஓர்க்ஸ்ர்டைர் சாஸ், வெள்ளை மிளகுத்தூள், உப்பு, சாதம், நூடுல்ஸ், வெங்காயத்தாள் போட்டு கிளறி சூடாக பரிமாறவும்.