சிங்கப்பூர் நூடுல்ஸ்



என்னென்ன தேவை?

நூடுல்ஸ் - 2 பாக்கெட்,
வெங்காயம், குடைமிளகாய், கேரட் - தலா 1,
பச்சைப்பட்டாணி - 1 கப்,
கோஸ் - 2 கப்,
வெங்காயத்தாள் - 1 கப்,
பூண்டு, இஞ்சி - தலா 1 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்,
கறி பவுடர் - சிறிது,
உப்பு, எண்ணெய், சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு,
தக்காளி சாஸ் - சிறிது.

எப்படிச் செய்வது?

நூடுல்ஸை வேகவைத்து கொள்ளவும். காய்கறிகள், பூண்டு, இஞ்சி அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு, இஞ்சி, வெங்காயம், கேரட், குடை மிளகாய், கோஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் கறி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், எலுமிச்சைச்சாறு, வெள்ளை மிளகுத்தூள், உப்பு, நூடுல்ஸ், வெங்காயத்தாளை போட்டு கிளறி சூடாக பரிமாறவும்.