வெஜிடபிள் நூடுல்ஸ்



என்னென்ன தேவை?

நூடுல்ஸ் - 1 பாக்கெட்,
வெங்காயம், குடைமிளகாய், கேரட் - தலா 1,
கோஸ் - 2 கப்,
வெங்காயத்தாள் - 1 கப்,
உப்பு, வெள்ளை மிளகுத்தூள், எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

காய்கறிகளை நீளமாக நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் நூடுல்ஸை போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி, அகலமான தட்டில் போட்டு 2 துளிகள் எண்ணெய் விட்டு கலந்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து வெங்காயம், கேரட், குடைமிளகாய், கோஸ் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் நூடுல்ஸ், உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாளை சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.