ஸ்டிர் ஃப்ரைடு வெஜிடபிள்



என்னென்ன தேவை?

கேரட் - 50 கிராம்,
கோஸ் - 100 கிராம்,
பீன்ஸ் - 25 கிராம்,
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 1,
புரொக்கோலி, ஸுக்கினி - தலா 50 கிராம்,
பூண்டு, இஞ்சி, செலரி, ஸ்ப்ரிங் ஆனியன் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு,
சோள மாவு - 25 கிராம்.

எப்படிச் செய்வது?

நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ், புரொக்கோலி, ஸுக்கினி ஆகியவற்றை வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சைமிளகாய், செலரியை போட்டு நன்றாக வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் வேகவைத்த காய்கள், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி, கெட்டியாக வந்ததும், ஸ்ப்ரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறவும்.